Ad Code

Responsive Advertisement

தனியார் கல்லூரிகளின் நுழைவுத்தேர்வுகளை கண்காணிக்க வல்லுனர் குழு அமைக்க வலியுறுத்தல்

தனியார் கல்லூரிகள் நடத்தும் நுழைவுத்தேர்வை கண்காணிக்க வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் என மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்காக தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வை நடத்த விதி முறைகளை சுப்ரீம் கோர்ட் வகுத்துள்ளது. அந்த வகையில் மாநில அரசுகள் உயர்கல்வி சேர்க்கை ஆணையத்தை அமைக்கிறது. அதன்படி புதுச்சேரியில் அமையப்பெற்ற சேர்க்கை ஆணையத்தின் தலைவராக முன்னாள் ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன் செயல்படுகிறார்.

தற்போது, அவர் தலைமையில் செயல்படும் உயர்கல்வி சேர்க்கை ஆணையம், புதுச்சேரியில் உள்ள சுயநிதி சிறுபான்மையினர் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களின் கீழ் செயல்படும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக நடைபெறும் நுழைவுத் தேர்வில், வல்லுனர்களை கொண்டு குழு அமைக்க வேண்டும்.

குறிப்பாக, புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக் கழக துணைவேந்தர், ஜிப்மர் தன்னாட்சி நிறுவனத்தின் இயக்குனர், சுகாதாரத்துறை செயலாளர், புதுச்சேரி உயர் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி துறை இயக்குனர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.

கல்லூரிகள் சுட்டிக்காட்டிய உறுப்பினர்களை கொண்டு மாணவர்களை தேர்வு செய்தால் தவறுகளுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே தேர்வுத்தாளை தயார் செய்தல், விடைத்தாளை திருத்துதல், தேர்வை கண்காணித்தல், தேர்வு முடிகளை வெளியிடுதல் போன்றவற்றை, துறைகளை சேர்ந்த அதிகாரிகளை குழுவாக நியமித்து அந்த குழுவே செயல்பட வேண்டும்.

ஆனால் கண்துடைப்பிற்காக உயர்கல்வி சேர்க்கை குழு செயல்படுமானால், சுப்ரீம் கோர்ட் வகுத்த நெறிமுறைகள் அர்த்தமற்று போய்விடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement