Ad Code

Responsive Advertisement

கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை

கல்கி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கி.ராஜேந்திரன் கூறியதாவது: படிப்பில் சிறந்து விளங்கி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி அறக்கட்டளை வழங்கும், பரிசுத் தொகை, நடப்பு கல்வியாண்டில், ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கல்வி பயிற்சி தேவைப்படும், விசேஷ திறனாளி மாணவர் ஐந்து பேருக்கு, தலா, 5,000 ரூபாயும்; மீதத் தொகை, பட்ட மேற்படிப்பு மாணவருக்கு, 10 ஆயிரம்; பட்டப்படிப்பு மாணவருக்கு, 7,500; பாலிடெக்னிக் அல்லது பிளஸ் 2 மாணவருக்கு, 5,000 ரூபாய் என, வினியோகிக்கப்படும். உதவித்தொகை பெற விரும்புபவர்கள், மாணவரின் முழு விலாசத்துடன், ஐந்து ரூபாய் தபால் உறையை, 'நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை - 20' என்ற முகவரிக்கு, ஜூலை 15க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement