Ad Code

Responsive Advertisement

கல்வி மற்றும் தசையிறக்க பயிற்சிக்கு ரூ.5.87 லட்சத்தில் பொருட்கள் வழங்கல்

திருச்சி மாவட்டத்தில், 16 ஒன்றியங்களுக்கு, 5.87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு கல்வி மற்றும் தசையிறக்க பயிற்சிக்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், பாலக்கரை அரசு சையது முர்துஸா மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தொடங்கிவைத்தார். மணப்பாறை, கோவில்பட்டி, முத்தரசநல்லூர், சோமரசம்பேட்டை, லால்கு
டி, காட்டூர், பாலசமுத்திரம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில், ஆகஸ்ட், 2ம் தேதி வரை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனுடையவரின் குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவர்கள், அரசின் உதவிகள் பெற ஏதுவாக, அடையாள அட்டையும், உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சைக்கான ஆலோசனை வழங்கப்படும். கடந்தாண்டு முகாம் மூலமாக, 2,833 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறியப்பட்டு, முசிறி, ஸ்ரீரங்கம், திருச்சி அரசு மருத்துவமனையில்,165 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும், 385 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களும், 677 குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2,000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிய, முகாமில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட, 684 இல்லம் சார் குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, 74 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் ஐந்து இயன்முறை மருத்துவர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து, சிறப்பு ஆசிரியர்களால் பயிற்சியும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில் செயல்படும் பகல்நேர பாதுகாப்பு மையங்களில், 191 குழந்தைகள் பயனடைகின்றனர்.
சிறப்பு கல்வி மற்றும் தசையிறக்க பயிற்சிக்கான பொருட்கள், 16 ஒன்றியங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பஸ் கட்டணம், மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். கடந்த, 21ம் தேதி நடைபெற்ற முகாம் மூலமாக, காதுகேளாதோர்,102 பேர், பார்வையற்றோர், 41 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள், 110 பேர், கை மற்றும் கால் பாதிக்கப்பட்டவர்கள், 81 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். முகாமில், முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், எஸ்.எஸ்.ஏ., முதன்மைக்கல்வி அலுவலர் மாரிமுத்து, இணைஇயக்குநர் மருத்துவப்பணிகள் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement