Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் இல்லாத அரசு பள்ளிக்கு பூட்டு

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மேட்டுக்கற்களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.


மேட்டுக்கற்களத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளியில், மாணவர்கள் இல்லாததால், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளை வைத்து பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியை ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியில் சேர வயது வராத குழந்தைகளை (அங்கன்வாடி) வைத்து மாணவர்களே இல்லாமல் பள்ளியை நடத்தி வந்தது தெரியவந்ததால், பள்ளியை தற்காலிகமாக மூட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டது. இது குறித்து உதவி தொடக்ககல்வி அலுவலர் லீலா கூறுகையில், ''மாணவர்கள் இல்லாமல் செயல்பட்டு வந்ததால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மூடப்பட்ட பள்ளியில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சேரும் பட்சத்தில் பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement