Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் வகுப்புகள்

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகுப்புகள் நேற்று துவங்கியது.

கல்வி துறை ஏற்பாடு பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளால் ஏற்படும் உளவியல் பிரச்னைகள், தற்கொலை முயற்சிகள், பாலியல் பிரச்னைகள் போன்றவற்றால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்து வருகிறது.

இதற்காக நடமாடும் வாகனத்தில் சென்று ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் ஆலோசனை வகுப்புகள் எடுக்க உளவியல் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டது.

20 பள்ளிகள்

காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கியுள்ளது. நேற்று காலை காஞ்சிபுரம் சீனிவாச நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், பிற்பகல் இராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வகுப்புகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 20 பள்ளிகளில் இந்த உளவியல் வகுப்புகள் நடைபெற உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement