பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (ஜூலை 4) பரிசு வழங்குகிறார்.
முதலிடத்தில் எஸ்.சுஷாந்தி என்ற மாணவியும், இரண்டாவது இடத்தில் ஏ.எல்.அலமேலு என்ற மாணவியும், மூன்றாவது இடத்தில் டி.துளசிராஜன், எஸ்.நித்யா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்களில் மாநில அளவில் முதலிடத்தில் 19 பேரும், இரண்டாம் இடத்தில் 125 பேரும், மூன்றாவது இடத்தில் 321 பேரும் இடம்பெற்றனர். முதல் மூன்று இடங்களில் 465 மாணவ, மாணவியர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நேரில் பரிசுகளை வழங்குகிறார்.
இந்த ஆண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களோடு, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும் முதல்வர் நேரில் பரிசுகளை வழங்குவார் எனத் தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை