Ad Code

Responsive Advertisement

குரூப்-1 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?இணைய தளத்தில் சரிபார்க்கலாம்

சென்னை:வரும், 20ம் தேதி நடக்கும், குரூப் 1 தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர் பட்டியல் மற்றும், வரும், 27ம் தேதி நடக்கும்,
உதவி பொறியாளர் தேர்வுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.
வரும், 20ம் தேதி, குரூப் 1 நிலையில், 79 காலி பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு, 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியவர்களின் பெயர் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதேபோல், வரும், 27ம் தேதி, 98, உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா' என்பதை, இணையதளத்தில் பார்த்து, விண்ணப்பதாரர்கள் உறுதி செய்து கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியும், பெயர் இல்லை எனில், உரிய ஆதாரங்களுடன், contacttnpsc@gmail.com என்ற, இமெயில் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement