Ad Code

Responsive Advertisement

TET / PG TRB :Today Court Case news

இன்று நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கில் வணிகவியல் பாடத்தில் ”பி” வரிசை கேள்வித்தாளில் உள்ள 150வது கேள்வியான புதிதாக கம்பெனி திறக்க அனுமதி வாங்க வேண்டியது யாரிடம்? என்ற கேள்விக்கு இயக்குனர் (Option B ) போர்டு ( Option C ) என இரண்டு விடைகளில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எனவே வணிகவியல் பாடத்தில் மீண்டும் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இத்துடன் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான 12 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும் ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு மட்டும் பொருளியல் பாட வழக்கிற்கு பின் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. அந்த வழக்கானது தாள் 2 ல் உள்ள வேதியியல் பாடத்தில் கீ ஆன்சருக்கு ப்புரூப் இருப்பதாக வழக்கறிஞர் கூறியிருப்பதால் அந்த வழக்கு மட்டும் பொருளியல் தொடர்பான வழக்கு முடிவுக்கு பின் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தீர்ப்பின் போது நீதிபதி திரு. நாகமுத்து அவர்கள் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மிக விரைவில் ஆசிரியர் நியமனம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement