Ad Code

Responsive Advertisement

பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதல்: 13 பேர் பலி


தெலங்கானா மாநிலத்தில், பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதியதில் 12 பள்ளி குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். மேடக் மாவட்டத்தில், மாசாய்ப்பேட்டையில் உள்ள ஆளில்லா லெவல் கிராஸிங்கைக் கடக்க முயன்ற பள்ளிப்பேருந்து மீது, வேகமாக வந்த ரயில் மோதியது.
இதில் பள்ளிப்பேருந்து தூக்கி வீசப்பட்டது. இந்தக் கோர விபத்தில், 12 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேருந்தில் 38 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள கோம்பள்ளி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமைச்சர் ஜகதீஷ் ரெட்டி அந்த மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், அமைச்சர் ஹரிஷ்ராவ், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement