Ad Code

Responsive Advertisement

ரேண்டம் எண் என்றால் என்ன?

ஒரே மாதிரியான ரேங்க் மதிப்பெண்கள் (கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்கள்) பலர் இருக்கும் சூழ்நிலையில், யார் எந்த ரேங்க் என்று நிர்ணயிக்கப் பயன்படுத்தப்படும் எண்தான் ரேண்டம் எண். ஒரே அளவு கட் ஆஃப் மதிப்பெண்களை இரண்டு பேர் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதுபோன்ற சூழ்நிலையில், இரண்டு பேருக்கும் ரேங்க்கை நிர்ணயிப்பது எப்படி? அந்த இரு மாணவர்களும் கணிதப் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது முதலில் பார்க்கப்படும். கணிதத்திலும் அவர்கள் இருவரும் ஒரே மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதையடுத்து இயற்பியல் பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது பார்க்கப்படும். அதிலும் ஒன்றாக இருந்தால் அதையடுத்து நான்காவது விருப்பப்பாடமாக இருக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது உயிரியல் பாடத்தில் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு என்று பார்க்கப்படும்.

அதிலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அவர்கள் இருவரது பிறந்த தேதியைப் பார்ப்பார்கள். அதிலும் இருவரும் ஒரே தேதியில் பிறந்திருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வருவது ரேண்டம் எண். இது கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்படும் 10 இலக்க எண்ணாகும். குலுக்கல் முறையைப் போன்று கம்ப்யூட்டர் மூலம் இந்த எண் உருவாக்கப்படுகிறது. இதில் கூடுதலான எண் வருபவர் ரேங்க் அடிப்படையில் முன்னுரிமை பெற்றவராகக் கருதப்படுவார். இந்த ரேண்டம் எண் நிர்ணயிக்கப்பட்ட பிறகுதான் கவுன்சலிங்கிற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement