தர்மபுரி: தர்மபுரி அருகே போதிய, பள்ளி வகுப்பறை கட்டிடம் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியிலும், கோவில் மைதானத்திலும் அமர்ந்து படிக்கும் அவல நிலை உள்ளது.
இக்கட்டத்தில் போதிய வசதியின்றி, மாணவர்கள் படித்து வந்தனர். இதனால், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், தங்களது குழந்தைகளை அருகில் உள்ள ஜருகு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். சிலர், தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர்.
மாணவர்களின் நலன் கருதி, கடத்திக்குட்டையில் இயங்கி வரும், அரசு துவக்கப்பள்ளிக்கு, பள்ளி கட்டிடம் அமைக்க கோரி, இப்பகுதி பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறையினருக்கு, தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பள்ளி கட்டிடம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் சார்பாக, பள்ளி கட்டிடம் கட்ட அரசுக்கு, இப்பகுதி பொதுமக்கள் தானமாக இடம் வழங்கி உள்ளனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், கடத்திக்குட்டை அரசு துவக்கப்பள்ளிக்கு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், பள்ளி இயங்கி வந்த, கட்டிடம், தனக்கு சொந்தமானது என்ற ஆதாரத்தை சமர்ப்பித்த பெருமாள், கடந்த, 2ம் தேதி பள்ளி செயல்பட்டு வந்த கட்டிடத்தின் மேற்கூரையை அகற்றி உள்ளார்.
மேலும், பள்ளி தனக்கு சொந்தமான கட்டிடத்தில், தொடர்ந்து இயங்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர், இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். கட்டிட தொடர்பான பிரச்சனை, கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருவதால், ஊர் பொதுமக்கள் சார்பாக, பள்ளி கட்டிடம் கட்ட, இடம் வாங்கி அரசுக்கு வழங்கி உள்ளனர்.
ஆனால், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம், பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிக்க, கட்டிட வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வேறு வழியின்றி, கடத்திக்குட்டையில் உள்ள திறந்தவெளி, மரத்தடி மற்றும் ஓம்சக்தி கோவில் வளாகத்தில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.
இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். இது குறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:
கடத்திக்குட்டை அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்த கட்டிடம், தனியாருக்கு சொந்தமான கட்டிடம் என தெரியவந்துள்ளது. அவர்கள், தங்களுக்கு சொந்தமான கட்டிடத்தில், மாணவர்களை படிக்க அனுமதிக்காமல், வெளியேற்றி உள்ளனர். இதனால், போதிய கட்டிட வசதியின்றி, மாணவர்கள் திறந்து வெளியில் படித்து வருவதாக, ஆசிரியர்கள் மற்றும், பொதுமக்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில், மாணவர்களுக்கு தேவையான கட்டிட வசதி செய்து தரப்படும், என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை