Ad Code

Responsive Advertisement

அதிர்ச்சி! : 25 சதவீத இட ஒதுக்கீடு இல்லாததால்... : கல்லூரி, தனியார் பள்ளிகள் அடாவடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை அமலில் இல்லை, என, மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளில், 2009ம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை, எளிய மாணவர்களுக்கு, 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், பெருவாரியான பள்ளிகளில், இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. குறிப்பாக, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளி, கல்லூரிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது.
ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் பெருவாரியான தனியார் பள்ளிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதாக, போலி பட்டியல் தயாரித்து, அரசுக்கு அனுப்பி வருகின்றன. இதற்கு, கல்வித்துறை அதிகாரிகளும், உடந்தையாக உள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகம், அரசியல்வாதிகள் கைகளில் உள்ளதால், நடவடிக்கை எடுக்கவே, கல்வித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதை தட்டி கேட்கும் நபர்களை, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, மெட்ரிக் ஆய்வாளர் வரை மிரட்டுகின்றனர் என, மாணவ, மாணவிகளின் பெற்றோர் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, இந்திய மாணவர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில், இட ஒதுக்கீட்டால் பயனடைந்த ஏழை, எளிய மாணவர்களின் பெயர்களை, கல்வித்துறை அலுவலக அறிவிப்பு பலகைகளில் ஒட்டி வைக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதை செய்யாத வரை, முறைகேடு நடந்த கொண்டு தான் இருக்கும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement