Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில், கோடை விடுமுறைக்‍குப் பின்னர் அரசு பள்ளிகள் நாளை திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பள்ளி தொடங்கும் முதல் நாளன்றே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்‍குப் பின், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் நாளை தொடங்குகின்றன. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், பள்ளி தொடங்கும் முதல் நாள் அன்றே மாணவ, மாணவிகளுக்‍கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. 
தமிழகத்தில் கல்வித்துறையை மேம்படுத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், கலர் பென்சில்கள், புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டி, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன்பயனாக, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்துள்ளது. 

இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை தொடங்குகின்றன. பள்ளி தொடங்கும் முதல் நாளன்றே, மாணவ, மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதன்பேரில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement