Ad Code

Responsive Advertisement

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்க கல்வி துறை உத்தரவு

பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்புகார் பெட்டி வைக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சில இரண்டு நாட்கள் கழித்து திறக்கப்படும் என அறிவித்துள்ளன.
கல்லூரிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை இன்னும் முடியவில்லை. இதனால் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து திறக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் குற்ற செயல்கள் நடைபெறுவதை கண்டறியவும், தடுக்கவும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகள் இவற்றை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் வைக்கப்படும புகார் பெட்டிகளை மாதம் ஒரு முறை திறந்து அதில் உள்ள மனுக்களை தலைமை ஆசிரியர் எடுத்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த புகார் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள்,நன்னடத்தை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் தீர விசாரித்து தீர்வு காண வேண்டும் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புகார்களின் தன்மையை பொறுத்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement