Ad Code

Responsive Advertisement

CBSE நடத்திய JEE தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ மூலம் நடத்தப்பட்ட JEE பிரதான தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணைய தளத்தில்(http://jeemain.nic.in/jeemainapp/Welcome.aspx) வெளியிடப்பட்டுள்ளன. மத்திய பள்ளிக் கல்வி வாரியம்(CBSE) மூலம் ஆண்டு தோறும் ஜெஇஇ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஜெஇஇ தேர்வு ஏப்ரல் 19ம் தேதி ஆன்லைனில் நடந்தது. அதில் 50 சதவீத மாணவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்வு எழுதினர்.
இந்த ஆண்டுக்கான தேர்வில் நாடுமுழுவதும் 13 லட்சத்து 57 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களுக்காக ஆப்லைன், ஆன்லைன் ஆகிய பிரிவுகளில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் http://jeemain.nic.in/jeemainapp/Welcome.aspx என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்

Ad Code

Responsive Advertisement