Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு கிடையாது: தனியார் பள்ளிகள் அறிவிப்பு!


சென்னை: ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில்லை என தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கான செலவுத் தொகையை அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக 25 சதவீத இடஒதுக்கீட்டில் படித்த ஏழை மாணவர்களுக்கான செலவுத் தொகையை, தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. செலவினத் தொகையை அரசு வழங்கினால்தான் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியும்

எனவே, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில்லை என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்துள்ளோம்'' என்றார்.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார்கள் பள்ளிகளில், பள்ளி அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு 25 சதவீதம் கட்டாயம் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அந்தந்த மாநில அரசுகள் கட்ட வேண்டும். ஆனால் அக்கட்டணத்தை அரசு கட்டவில்லை என்று கடந்த பல மாதங்களாகவே தனியார் பள்ளிகள் புகார் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், சில தனியார் பள்ளிகளில் அரசு கட்டணம் செலுத்தவில்லை என்பதால் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களை வகுப்பு வெளியே நிறுத்தி வைத்தும், சில பள்ளிகளில் அவர்களை ஒதுக்கப்பட்டவர்களை போன்று தனியான இடத்தில் அமர செய்து ஏனோ தானோவென்று வகுப்புகளை நடத்தியதாகவும் புகார்கள் வந்தன.  இதன்காரணமாக தாங்கள் மற்ற மாணவர்கள் முன்னர் மிகவும் அவமானப்படுவதாகவும், இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ஏழை மாணவர்கள் கூறிவந்த நிலையில், தனியார் பள்ளிகள் அதிரடியாக, இனிமேல்  செலவினத் தொகையை அரசு வழங்கினால்தான் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்த்துக்கொள்வோம் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Ad Code

Responsive Advertisement