Ad Code

Responsive Advertisement

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு- இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 


முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement