Ad Code

Responsive Advertisement

ஹெச்.எம் சஸ்பெண்ட் விவகாரம்: போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள்.

குமரி மாவட்டம் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த இரணியல், பளுகல் அரசு மேல்நிலை பள்ளிகள், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
பாடவாரியாக குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்று கொடுத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் 12 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


மாவட்ட கலெக்டரால்எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘கமிஷன் ஒன்றை அமைத்து தமிழக கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும்.ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படுகின்ற மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என வலியுறுத்தி நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு தடை விதித்தால் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவே போலீசார் தடை விதித்தனர்.இதனால், தடையை மீறி போராட்டம் நடத்தும் முடிவை ஆசிரியர்கள் கைவிட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் இன்று மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement