Ad Code

Responsive Advertisement

முதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை

முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.



தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement