Ad Code

Responsive Advertisement

தர ஊதியத்தில் பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் கல்வித்துறை உத்தரவால் தமிழாசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ் பட்டதாரி ஆசிரியர் தர ஊதிய உயர்வாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்துவதால்

அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தர ஊதியம் ஜனவரி2011ல் வெளியிடப்பட்டது. இதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் பட்டதாரிகள் உள்பட) தர ஊதியம் ரூ.4400ல் இருந்து ரூ.4600ஆக உயர்த்தி அரசாணை (எண்.23)வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சில பாட ஆசிரியர்கள் தங்களுக்கும் தர ஊதியம் உயர்த்த கோரிக்கைவிடுத்தனர்.

இதையடுத்து ஜுலை 2013ல் திருத்திய தர ஊதிய அரசாணை 263 வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் நிதித்துறையினர்1988ம் ஆண்டிற்கு முன் காலாவதியான தமிழ் பண்டிட் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். (1988ல் தமிழ் பண்டிட் என்ற சிறப்பாசிரியர் பட்டியலில் இருந்து பள்ளி உதவியாசிரியர் பின்னர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் என தமிழாசிரியர்கள் பெயர் மாற்றம் பெற்று பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தை பல ஆண்டுகளாக பெற்று வருகின்றனர்). இந்நிலையில் ஜுலை2013அரசாணையில் பயன்படுத்திய தமிழ் பண்டிட் என்ற வார்த்தையையடுத்து2011ஜனவரியில் தர ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது பொருந்தாது என கல்வித்துறை தெரிவித்தது. எனவே 2011ல் இருந்து பெற்ற ஊதிய உயர்வு தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோ கூறுகையில்ஜுலை 2013ல் வெளியிடப்பட்ட ஆணையில் தமிழ் பண்டிட் என்ற வார்த்தை பயன்படுத்தியதை நீக்கி அரசாணை வெளியிட அரசுக்கு கோரிக்கைவிடுத்தோம். டிசம்பர்.2013ல் தமிழ் பட்டதாரி ஆசிரியர் என திருத்திய அரசாணை(எண்.434)வெளியிடப்பட்டது. ஆனால் இதையறியாமல் மாவட்ட கல்வித்துறையினர் நடந்துகொள்கின்றனர். அரசாணை.434ன்படி தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள்தான். அவர்கள் எந்த தொகையையும் திரும்ப செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement