Ad Code

Responsive Advertisement

வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும். 
அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு, இரண்டாம் பருவத்தேர்வு, மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement