Ad Code

Responsive Advertisement

Flash News:+2 RESULTS PUBLISHED - FULL DETAILS

  • +2 தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • 97.65% பெற்று விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம்.
  • 84% பெற்று வேலூர் & கடலூர்  மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடம்.




  • 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி
  • 292 அரசு பள்ளிகள் உட்பட 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி
+2 தேர்வு முடிவுகள் 200/200 மதிப்பெண்கள் பெற்றவர்கள்... 


  • வேதியில் - 1123
  • இயற்பியல் - 187
  • வணிகவியல் - 8301
  • கணக்குப்பதிவியல் - 5597
  • கணிதம் - 3656

* மாநகராட்சி பள்ளிகள் 90.06 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.


* ஆங்கிலோ இந்தியன் பாடப்பிரிவில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.06 சதவிகிதம்.


* தஞ்சாவூர், கோவையில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி வராததால் தேர்வு முடிவு வெளியாகவில்லை.


* வேலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் தேர்வெழுதிய 24,497 பேரில் 19,677 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


* தமிழகம், புதுச்சேரியில் 92.1 சதவகித மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டைவிட 0.7 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாணவர்களைவிட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


* 94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


* 89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


* நகராட்சிப் பள்ளிகள் 87.20 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


* பழங்குடியினர் பள்ளிகள் 86.65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


* சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில் 97.77 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


* 1126 முதல் 1150 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு சி கிரேடு வழங்கப்பட்டுள்ளது.


* தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86 சதவீதம் ஆகும்.
* தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் யாரும் 200 மதிப்பெண் எடுக்கவில்லை.


* 97.85 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 33 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் 84 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.


* வேதியியல் பாடத்தில் 1123 பேரும், இயற்பியல் பாடத்தில் 187 பேரும், வணிகவியல் பாடத்தில் 8301 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 5597 பேரும், கணிதம் பாடத்தில் 3656 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


தமிழகத்தில், இந்தாண்டு பிளஸ்2 தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்தாண்டு முதல் பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிடும் முறையைத் தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. எனவே, மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது.


இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய செங்கோட்டையன், 'ரேங்கிங் எனப்படும் தரவரிசைப் பட்டியல், மாணவர்களிடையே உளவியல்ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். மேலும் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வை நடத்த ஆலோசனை செய்துவருகிறோம்' என்றார்.


குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மனச்சோர்வடைந்து, தவறான முடிவுகள் எடுக்காமல் இருக்க, 104 என்ற இலவச தொலைபேசி சேவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்ணுக்கு போன் செய்து, ஆலோசனைகள் பெறலாம். +2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கு மூன்று இணையதளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரேங்கிக் முறை ரத்து செய்யப்பட்டதால் முதல் மூன்று இடங்களில் பிடித்தவர்கள் பட்டியல் வெளியாகது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement