Ad Code

Responsive Advertisement

TET - மனித திசுக்களின் வகைகள் பற்றிய சில தகவல்கள்:-

மனித திசுக்களின் வகைகள் பற்றிய சில தகவல்கள்:-


⭕ மனித திசுக்களின் வகைகள் - 5
1. எபிதீலியத் திசு
2. கடத்தும் திசு
3. இணைப்பு திசு
4. நரம்பு திசு
5. தசை திசு

1. எபிதீலியத் திசு
⭕ எபிதீலியத் திசு வகைகள்
அ. தட்டை எபிதீலியம்
ஆ. தூண் எபிதீலியம்
இ. கனசதுர எபிதீலியம்
ஈ. குறுகிழை எபிதீலியம்
உ. உணர்வு எபிதீலியம்
ஊ. சுரப்பி எபிதீலியம்
எ. இனப்பெருக்க எபிதீலியம்
(அ) தட்டை எபிதீலியம்:
💢 இது ஒரு வரிசையில் அமைந்த தட்டையான செல்களின் தொகுப்பு
💢 இந்த திசுக்கள் கன்னத்தின் உட்புறமும், உடலுக்குள் உள்ள உறுப்புகளின் படலத்திலும் காணப்படும்.
💢 பாதுகாப்பு & நுரையீரல் உள்ள காற்று நுண்ணுறைகளில் வாயுக்களின் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
(ஆ) தூண் எபிதீலியம்:
💢 இத்திசு உள்ள செல்கள் உயரமானதும், உருளை வடிவம் கொண்டவையும் ஆகும்.
💢 இத்திசு செல்களின் அடியில் முட்டை வடிவ உட்கரு உள்ளது.
💢 சிறுகுடலில் உட்சுவரில் காணப்படுகிறது.
💢 வயிற்றின் சுவற்றில் நொதிகளை சுரக்கவும், சிறுகுடலில் செரிக்கப்பட்ட உணவிணை உறிஞ்சவும் பயன்படுகிறது.
(இ) கனசதுர எபிதீலியம்:
💢 இத்திசு கனச்சதுரமானவை
💢 இது குடல் & நாளமில்லா சுரப்பிகள் சுவர்களில் காணப்படுகிறது.
💢 சுரத்தல் மற்றும் சிறுநீரக குழாய்களின் மறு உறிஞ்சுதல் மூலம் நீரை உறிஞ்ச பயன்படுகிறது
(ஈ) குறுயிழை எபிதீலியம்:
💢 இதில் உள்ள செல்களின் விளிம்பில் சிறிய புரோட்டோபிளாச நீட்சிகளான குறுயிழைகள் காணப்படும்.
💢 காற்றுக்குழல் அல்லது ட்ரக்கியாவின் உட்புறம் இத்திசுக்கள் உள்ளன.
💢 சிலியாக்கள் அசைவதன் மூலம் மாசுத் துகள்கள் நீக்கப்படுகின்றன.
(உ) உணர்வு எபிதீலியம்:
💢 இத்திசுவில் உள்ள செல்கள் தொடு உணர்வுக்குத் துலங்கும் வண்ணம் மாறுபாடு அடைந்துள்ளன.
💢 இது நாசிக் குழலின் உட்சுவரில் உள்ள நுகரும் எபிதீலியல் செல்களில் காணப்படுகிறது.
கடத்தும் திசு பற்றிய சில தகவல்கள்:-
⭕ இது ஒரு திரவத் திசு.
⭕ உணவுப் பொருள், சுவாச வாயுக்கள், கழிவுப்பொருட்கள் போன்றவற்றை கடத்துவதற்கு ஏற்ற தகவமைப்பை பெற்றுள்ளது.
⭕ இது 55% பிளாஸ்மாவும், 45% இரத்த செல்களும் உள்ளன.
⭕ இரத்த செல்கள் வகைகள் - 3
1. இரத்த சிவப்பு அணுக்கள்
2. இரத்த வெள்ளை அணுக்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்)
💢 இவை இரத்தத்தில் பெருமளவில் காணப்படுகிறது.
💢 ஒவ்வொரு அணுவும் வட்ட வடிவமாகவும், இருபுறமும் குழிந்தும் காணப்படுகிறது.
💢 இவற்றில் உட்கரு காணப்படுவது இல்லை.
💢 ஹீமோகுளோபின் என்ற சுவாச நிறமியை பெற்றுள்ளது.
💢 எலும்பு மஜ்ஜையில் உருவாகிறது.
💢 இதன் ஆயுட்காலம் 100 முதல் 120 நாட்கள்
💢 இது நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது.
2. இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூக்கோசைட்கள்)
💢 இது நிறமிகளற்று ஒழுங்கற்ற வடிவம் கொண்டதுமான உட்கருவை கொண்டது.
💢 இது எலும்பு மஜ்ஜையிலும், நிணநீர் சுரப்பிகளிலும் உருவாகிறது.
💢 இதன் ஆயுட்காலம் 2 முதல் 3 வாரம்
💢 இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது.
💢 இது உடலின் காவல் படையாக இருந்து நோய்க் கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கிறது.
3. இரத்த தட்டுகள் (த்ராம்போசைட்டுகள்)
💢 இவை இரத்த செல்களில் மிகச் சிறியவை.
💢 இது நம் உடலில் காயங்கள் ஏற்படும் போது இரத்த உறைதலுக்கு உதவுகின்றன.
3. இணைப்பு திசுக்கள் பற்றிய சில தகவல்கள்:-
⭕இவ்வகையான திசு செல்கள் ஒழுங்கற்ற நிலையிலும், இடைவெளியுடனும், மேட்ரிக்ஸ் என்ற இடையீட்டுப் பொருள்களையும் கொண்டுள்ளது.
⭕ மேட்ரிக்ஸ் நெகிழ்வுத் தன்மை கொண்ட கூழ்மத் திரவம்மாகும்
⭕ இணைப்பு திசு வகைகள் - 2
1. கொழுப்பு திசு
2. தாங்கு திசு
1. கொழுப்பு திசு:
💢 இது கொழுப்பை சேமிப்பதற்கு தகுந்த மாறுபாடு கொண்டுள்ளது
💢 இவற்றில் செல்லிடைப் பொருள்கள் இல்லை.
💢 இது தோலுக்கு அடியிலும், உள்ளுறுப்புகளுக்கு இடையிலும் காணப்படும்.
2. தாங்கு திசு:
💢 உடல் முழுவதையும் தாங்குவதற்கு பயன்படுகிறது.
💢 தாங்கு திசு வகைகள் - 3
அ. குருத்தெலும்புத் திசு
ஆ. எலும்புத் திசு
இ. வலை இணைமத் திசு
(அ) குருத்தெலும்புத் திசு:
💢 இவ்வகையான திசுக்களில் உள்ள செல்கள் அகலமான இடைவெளி கொண்டவை.
💢 இதில் திட இடையீட்டுப் பொருட்கள் உள்ளன.
💢 இது மூட்டுகள், காது மடல், மூக்கு, மூச்சுக்குழல், குரல்வளை ஆகியவற்றில் காணப்படுகிறது.
(ஆ) எலும்பு திசு:
💢 இது நம் உடலைத் தாங்கி உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு.
💢 கால்சியம், பாஸ்பரஸ் கூட்டுப்பொருள்களால் ஆனது.
💢 ஒரு எலும்பு பிற எலும்புகளுடன் தசை நாண்களால் இணைக்கப்பட்டுள்ளது.
(இ) வலை இணைப்புத் திசு:
💢 இது தளர்ச்சியான இணைப்புத் திசுவாகும்.
💢 இது தோல், தசைக்கும் இடையிலும், நரம்பு மற்றும் எலும்பு மஜ்ஜைகளைச் சுற்றியும் இரத்த குழாய்களிலும் காணப்படும்.
💢 இது உறுப்புகளின் உள் அமைப்பைத் தாங்கவும், சிதைந்த திசுக்களை பழுது பார்க்கவும் பயன்படுகிறது.
நரம்பு திசுக்கள் மற்றும் தசை திசுக்கள் பற்றிய சில தகவல்கள்:-
1. நரம்பு திசுக்கள்:
💢 நரம்பு திசுவானது நரம்புச்செல் எனப்படும்.
💢 இது நியூரான்கள் என்கிற நர்புநார்களால் ஆனது.
💢 தொடு உணர்வு திறன், கடத்துத்திறன் பெற்றுள்ளதால் இத்திசு பிற திசுக்களின் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
💢 மூளை, தண்டுவடம், நரம்புகள் ஆகியவை நரம்புத்திசுக்களால் ஆனவை.
⭕ நரம்பு செல்கள்:
💢 இது நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகாகும்.
💢 இதன் நரம்பு மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்ப இதன் வடிவம் மாறுபடும்.
💢 முட்டை அல்லது வட்ட வடிவமாகவோ காணப்படும்.
💢 இதன் செல் உடலானது சைட்டான் எனப்படும்.
💢 சைட்டானில் உள்ள புரோட்டோபிளாசத்தில் நிஸல் எனப்படும் கருமையான துகள்கள் உள்ளன.
💢 சைட்டான் பல கிளைகளான டென்ரான்களைக் கொண்டுள்ளன. இது மேலும் கிளைத்து டென்ரைட்டுகளை உருவாக்கும்.
💢 சைட்டானிலிருந்து ஆக்ஸான் என்ற வால் போன்ற பகுதி உள்ளது.

2. தசை திசுக்கள்:
💢 இது நீண்ட செல்களால் ஆனவை
💢 இவை உடல் இயக்கத்திற்கு பயன்படுகிறது.
💢 இவை, சுருங்கும் புரதத்தால் ஆனவை.
💢 தசை திசு வகைகள் -3
1. வரித்தசைகள்
2. வரியற்ற தசைகள்
3. இதயத் தசைகள்
1. வரித்தசைகள்:
💢 எலும்புகளுடன் இணைந்திருப்பதால் எலும்பு தசைகள் எனப்படும்.
💢 இவை உருளை வடிவமாகவும் உள்ளன.
💢 இவற்றில் குறுக்கு வரிகள் காணப்படுவதால் இவை வரித்தசை என்று அழைக்கப்படுகிறது.
💢 செல்சுவரின் ஓரத்தில் எண்ணற்ற உட்கருக்கள் உள்ளன.
💢 உட்கரு சார்கோலமா என்னும் படலத்தால் சூழப்பட்டுள்ளன.
💢 இவை நம் இச்சைக்கு ஏற்பச் செயல்படுவதால் இயக்கு தசை என்றும் அழைக்கப்படுகின்றது.
2. வரியற்ற தசைகள்:
💢 இத்திசுக்களின் செல்கள் இணைந்து தசை தகடு போன்ற காணப்படும் இதில் வரிகள் இல்லை
💢 இது உணவு குழல், சிறுநீரகப் பை, மற்றும் பிற உள்ளுறுப்புகளின் சுவர்களின் காணப்படும்.
💢 இவை நம் இச்சைக்கு ஏற்பச் செயல்படாதவை, எனவே இயங்கு தசைகள் எனப்படும்.
3. இதய தசைகள்:
💢 அமைப்பில் இவை வரித்தசை நார்களையும், வரிற்ற தசை நார்களையும் ஒத்துள்ளன.
💢 இவை இதயத்தில் மட்டுமே காணப்படும்.
💢 இதயத் தசைநார்கள் பல உட்கருக்களைக் கொண்டவை.
💢 கருமை மற்றும் வெளிரிய மஞ்சள் கலந்த வரிகளைக் கொண்டது.
💢 இத்தசைகள் நம் வாழ்நாள் முழுவதும் சுருங்கி விரிகின்றன.
💢 இயங்கு தசைகள் இதயத் தசைகள் எனப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement