Ad Code

Responsive Advertisement

ATM.,களில் பணம் அள்ளலாம்!:விரைவில் வருகிறது அறிவிப்பு!!

புதுடில்லி:ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுப்ப தற்கு உள்ள கட்டுப்பாடுகள் இம்மாத இறுதி யில் விலக்கி கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான, 50 நாட் கள் அவகாசம், கடந்த ஆண்டு, டிச., 30 உடன் முடிவுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து, புத்தாண்டை முன்னிட்டு
நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இந்தக் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமரின் பேச்சில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்து, மத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:


செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பிறகு, ஏ.டி.எம்.,களுக்கு, ஒரு நாளில், சராசரியாக, 3,000 கோடி ரூபாய் வரை அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அது, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள் ளது. ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகளுக்கு தேவை யான நோட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் மக்களும், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவருகின்றனர்.

நகர் பகுதிகளில் நிலைமை சீரடைந்து வந்தா லும், அதிக அளவு ரொக்கப் பயன்பாடு உள்ள கிராமப் பகுதிகளுக்கு தேவையான பணம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள், நிலைமை முழுமையாகசீரடைந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ஏ.டி.எம்.,களில் இருந்து, ஒரு நாளில், அதிகபட்சம், 4,500 ரூபாயும், வங்கி களில், ஒரு வாரத்தில், 24 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப் பாடு, இம்மாதத்துடன் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement