Ad Code

Responsive Advertisement

இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.
    

சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, பல சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து, அரசு ஊழியர் சங்கம், போராட்டத்தை ஒத்திவைப்பதாக, நேற்று முன்தினம் அறிவித்தது.


போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 12 நாட்களுக்குப்பின், இன்று அரசுப்பணியாளர் சங்கத்தினர் பணிக்கு திரும்புகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் நேற்றே பணிக்குச்சென்றனர். வணிக வரித்துறை அலுவலர்கள், போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்கின்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement