Ad Code

Responsive Advertisement

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட்தோறும் எதிர்பார்ப்புஒவ்வொரு ஆண்டும், பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், மாத சம்பளம் பெறுவோரின் எதிர்பார்ப்பு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்பதாக உள்ளது. 

அதற்கேற்ப இதில் அவ்வப்போது உயர்வு செய்யப்பட்டும் வருகிறது.கடந்த ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஜூலை 10–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தினார்.முதல் முழுமையான பட்ஜெட்அது மட்டுமின்றி சேமிப்புகள் உள்ளிட்டவை அடங்குகிற 80–சி பிரிவின் கீழான வருமான வரிச்சலுகை உச்சவரம்பையும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாகஉயர்த்தினார். பி.பி.எப். என்னும் பொது சேம நிதியில் ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்ததை ரூ.1½ லட்சமாக அதிகரித்தார். வீட்டு கடன் மீதான வட்டிக்கு ரூ.1½ லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வந்ததையும் ரூ.2 லட்சமாக உயர்த்தினார்.இந்த நிலையில், வரும் 28–ந் தேதி மத்திய நிதி மந்திரி 2015–16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்தான், பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தனிநபர் வருமான வரிவிலக்கு

அந்த வகையில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பினை தற்போதைய ரூ.2½ லட்சம் என்பதை ரூ.3 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிற எதிர்பார்ப்புகளை பொறுத்தமட்டில்–

* சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம், நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு உண்டு. எனவே அவர் இந்த பட்ஜெட்டிலும் 80–சி பிரிவின் கீழான சேமிப்புகளுக்கான வருமான வரி சலுகை வரம்பை தற்போதைய அளவான ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்புஉள்ளது.
* சுகாதார காப்பீடு பிரீமிய வகையில் வரி விலக்கு சலுகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
* பென்சன் திட்டத்தில் வரிச்சலுகைக்கு வாய்ப்பு.
* கார்ப்பரேட் நிறுவன துறையை பொறுத்தமட்டில், சர்ச்சைக்குரிய பொது தவிர்ப்பு தடுப்பு விதிகள் அமலாக்கத்தை ஒத்தி போடலாம்.
* முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்குவரிச்சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
* மறைமுக வரிப்பிரிவில், சரக்குகள் மற்றும் சேவை வரிகள் அமலாக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா என்பதற்கு வரும் 28–ந் தேதி பதில் கிடைக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement