Ad Code

Responsive Advertisement

டான்செட் தேர்வு: ஏப்ரல் 1 முதல் பதிவு ஆரம்பம்

முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

மே 16, 17 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் பதிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மே 16-ஆம் தேதியும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு மே 17- ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்.

பதிவு செய்ய ஏப்ரல் 20 ஆம் தேதி கடைசி நாள். சென்னை மையத்தில் நேரடியாகப் பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசித் தேதியாகும்.

இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement