Ad Code

Responsive Advertisement

கடன் வாங்கி "சொந்த வீடு" வாங்குவது சரியா..?! தவறா..?! - ஒரு முழு அலசல்

 




சொந்த வீடு என்பது இந்தியாவில் இருக்கும் 70 சதவீத நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு என்றால் மிகையில்லை. முந்தைய தலைமுறையினருக்குச் சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தாலும், இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் எளிது. அதிலும் மாத சம்பளம் வாங்குவோருக்கு ரொம்பவும் ஈஸி.   இன்றைய நடைமுறை வாழ்க்கையில் கடன் வாங்கி சொந்த வீடு வாங்குவது சரியா..? யார் எப்படி வாங்குவது சரியாக இருக்கும்..? என்பதை பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.


தலைமுறைகள் மாறும் கனவு 


நம்முடைய அப்பாக்கள் பல தரப்பட்ட வேலையைச் செய்து வந்தாலும், பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும், அதன் மூலம் நல்ல வேலையும் பெற வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருந்த காரணத்தால் தற்போது இந்தத் தலைமுறையினருக்கு அதிகளவிலான சலுகைகள் கிடைத்து வருகிறது.


லாக்டவுன் ஜாக்பாட் 


குறிப்பாக இந்த லாக்டவுன் காலத்தில் பல முதல் தலைமுறை பட்டதாரிகள் சொந்த வீட்டை வாங்கியோ, அல்லது கட்டியோ உள்ளனர். இதற்கு ஏதுவாக லாக்டவுன் மூலம் ஏற்பட்ட பொருளாதாரப் பதிப்புகளை ஈடு செய்ய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை குறைத்தது.


வீட்டுக் கடன் 

இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எளிதாக வீட்டுக் கடன் வாங்க முடியும் சூழ்நிலை உருவானது. மேலும் வங்கிகளில் தற்போது வாராக் கடன் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் வீட்டுக் கடன் தான் வங்கிகளுக்குத் தற்போது மிகவும் பாதுகாப்பான வர்த்தகமாக உள்ளது. 


வீட்டுக் கடன் சிறந்தது 

சரி சொந்த வீடு வாங்குவோர் தற்போது 95 சதவீதம் பேர் கடன் மூலமாகவே வாங்குகின்றனர். வெளியில் கடன் வாங்கினால் 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வட்டியில் கடன் வாங்க வேண்டும் ஆனால் வங்கியில் கடன் வாங்கும் போது 60 பைசா முதல் 1 ரூபாய்க்கு உள்ளேயே வீட்டுக் கடனை வாங்க முடியும்.





கடன் மூலம் சொந்த வீடு 

விஷயத்திற்கு வருவோம். சொந்த வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு வங்கிக் கடன் மிகவும் சிறந்த தேர்வாக உள்ளது தெளிவாகியுள்ள நிலையில், கடன் மூலம் வீடு வாங்குவது சரியா என்பதைச் சில முக்கியக் காரணங்கள், தேவைகள் வைத்து எளிதாகக் கணக்கிட முடியும்.


முதலீடாகப் பார்ப்போம். 

சரி வீடு வாங்குவதை எமோஷனலாகப் பார்க்காமல் ஒரு முதலீடாகப் பார்ப்போம். பொதுவாகப் பெரு நகரங்களில் வீட்டு வாடகை மிகவும் அதிகமாக இருக்கும், குறைவாக வீட்டு வாடகை உள்ள வீடு மிகவும் தொலைவில் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டு வாடகை, பயணச் செலவு, பயண நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சொந்த வீடு வாங்கலாம்.


செலவுகள் கணக்கீடு 

உதாரணமாக ஒரு கணக்கைப் பார்ப்போம்.. 

வீட்டு வாடகை - 25000 ரூபாய் 

பயணச் செலவு - 6000 ரூபாய் 

பயண நேரம் - 3 மணிநேரம் (காலை - மாலை) பயணத்தின் மூலம் ஏற்படும் உடல் வலி அதற்கான மருத்துவச் செலவு, உடல்நலக் குறைவால் எடுக்கப்படும் விடுமுறை ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பார்த்தார் குறைந்தது 35000 ரூபாய் வருகிறது.


52 லட்சம் ரூபாய்க் கடன் 

இந்த 35000 ரூபாய் மாத செலவிற்கு நீங்கள் தற்போது சந்தையில் கிடைக்கும் சராசரி வீட்டுக் கடன் வட்டி அளவான 7 சதவீதத்தை வைத்துக் கணக்கிட்டால் 52 லட்சம் ரூபாய்க் கடன் பெற முடியும். இந்தத் தொகையை வைத்து நீங்கள் கட்டாயம் பெரும் நகரங்களில் ஒரு நல்ல வீட்டை வாங்க முடியும். எதிர்காலத்தில் ஒரு வாடகை வருமானத்தையும் பெற முடியும்.


டவுன் மற்றும் சிறிய நகரங்கள் 

இதேபோல் டவுன் மற்றும் சிறிய நகரங்களில் சொந்த வீடு வாங்க நீங்கள் திட்டமிடும்போது, சில மாறுபட்ட வழிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். டவுன் மற்றும் கிராமங்களில் வாடகை மிகவும் குறைவாகவே இருக்கும், பயணத் தூரமும் குறைவாகவே இருக்கும். இதனால் மாத செலவுகள் கண்டிப்பாகக் குறைவாகவே இருக்கும்.


சேமிப்பு முக்கியம் 

இப்படியிருக்கும் சூழ்நிலையில் சொந்த வீடு வாங்குவதற்கு முன்பு குறைந்த பட்சம் 50 சதவீத தொகையைச் சேமிப்பு அல்லது முதலீடு செய்து சேர்த்துக்கொண்டு மீத தொகைக்குக் கடன் மூலம் வாங்குவது சிறந்த வழியாக இருக்கும். 4000 முதல் 6000 ரூபாய் வீட்டு வாடகைக்கு 25000 முதல் 30000 வரையில் ஈஎம்ஐ செலுத்துவது தேவையற்ற ஒன்று.


வீட்டு வாடகை வருமானம் 

இதேபோல் நீங்க வாங்கும் அல்லது கட்டப்படும் வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமாயின் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் கட்டாயம் கடன் சுமையில் பெரும் பகுதி குறைக்க முடியும். எனவே நீங்கள் செய்யும் முதலீடு பயனுள்ளதாக மாற வேண்டுமே தவிரச் சுமையாக மாறக் கூடாது.


10 வருடத்தில் விலை மாற்றம் 

அந்த வகையில் ஏற்கனவே சொன்னது போல் சொந்த வீட்டை ஒரு முதலீடாகப் பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் வீடு அல்லது அப்பார்ட்மென்ட் அடுத்த 10 வருடத்தில் எவ்வளவு வளர்ச்சி அடையும் என்பதைக் கடந்த கால வளர்ச்சி அளவீட்டை வைத்துக் கணக்கிட வேண்டும். இதைச் சரியாக யோசித்தாலே உங்கள் சொந்த வீடு பெரிய சொத்தாக மாறும்.


ஹைதராபாத்-ல் சொந்த வீடு 

ஒரு சின்ன உதாரணம் 2014ல் ஒருவர் தென்னிந்தியாவின் மிக முக்கிய வர்த்தக நகரமான ஹைதராபாத் நகரின் வெளிப்புறத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்குகிறார். கையில் ஏற்கனவே 3 லட்சம் ரூபாய் இருந்த காரணத்தால் 7 லட்சம் ரூபாய்க்கு மட்டும் கடன் பெற்று வீட்டை வாங்குகிறார்.





வீட்டுக் கடன் தீர்த்தல் 

இந்த வீட்டில் இருந்து எந்த வாடகை வருமானமும் இல்லாத பட்சத்தில் தினசரி பயணம் செய்து அலுவலகத்திற்கு வந்து சென்றார், 2018ல் மொத்த வீட்டுக் கடனையும் அடைத்த போது மொத்தமாக வீட்டிற்காகச் செலவு செய்யப்பட்ட தொகை 15 லட்சமாக இருந்தது.


100 சதவீதம் வளர்ச்சி 

2019ல் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் அவர் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீடு தற்போது 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த 6 வருடத்தில் இவரின் முதலீடு சுமார் 100 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு எப்போதும் நீண்ட கால முதலீடு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement