Ad Code

Responsive Advertisement

M sand-இல் வீடு கட்டுவது சரியானதா? விரிசல் ஏற்படுமா? M sand கொண்டு வீடு கட்டியவர்கள் என்ன சொல்வது என்ன..???

 




இன்றைய தொழில்நுட்பம் மனிதர்களை எவ்வளவு அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் அவர்களிடம் மாறாத சில நம்பிக்கைகள் இருக்கின்றன.


அவற்றுள் ஒன்று, ஆற்று மணல். சிமெண்ட் கலவையில் மணல் கலந்து வீடு கட்டினால்தான் உறுதியாக இருக்குமென்று அவர்கள் நம்புகிறார்கள்.



அது எவ்வளவு விலையானாலும் வாங்கி முழு வீட்டையுமே கட்டுகிறார்கள். எம் சாண்ட் (தயாரிக்கப்படும் மணல்) கலந்தும் சிலர் கட்டுகிறார்கள்.


சிலர் சுவரை எம் சாண்டில் கட்டிவிட்டு ரூஃப் கான்கிரீட்டுக்கு மட்டும் மணல் பயன்படுத்துகிறார்கள்


நண்பர் ஒருவர் M sand இல் வீடு கட்டியுள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட தகவலை தான் உங்களிடம் பகிர்ந்துகொள்ள போகிறேன்.


M sand கான்கிரீட்டுக்கு மிகவும் ஏற்றது. அதேபோல் இதில் கலப்படமும் குறைவு என்கிறார் நண்பர். அதுவே ஆற்றுமணல் எடுத்துக்கொண்டால் அதில் கலப்படம் அதிகம். ஆற்றுமணலில் சிலிக்கா எனும் நுண் தாது இருக்கும்.



அது உ*டலுக்கு ஏற்றது அல்ல. இந்த சிலிக்கா பிரச்சனை M sand இல் இல்லை.


M sand இல் உள்ள ஒரே பி*ரச்சனை என்ன தெரியுமா? particle size  மட்டும் தான். ஏனெனில் M sand இல் உள்ள துகள்கள் ஒழுங்கற்ற முறையில் இருக்கும்.


இதில் உள்ள நன்கு சலித்த மணலையே பூச்சு வேலைக்கு பயன்படுத்த வேண்டும். விரிசல் எனும்போது அது எப்போது ஏற்படும் என்றால், ஈரப்பதம் குறைவாக இருக்கும்போது தான் ஏற்படும்.



ஆற்று மணல் எனும்போது, ஈரப்பதம் அதிகம். அதுவே M sand எனும்போது, கலவையில் ஈரப்பதத்தை சற்றே அதிகமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவுதான்.


கட்டிடத்தை பொறுத்தவரை பலம் என்னமோ, M sand கட்டிடத்தில் தான். M sand-ம் இயற்கை மணலை போல்தான். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் M sand  தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.



பல்வேறு சோதனைகளில் ஆற்றுமணலை காட்டிலும் M sand சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.


M sand ஐ வாங்கும்போது ஒரு விஷயத்தை கண்டிப்பாக பார்ப்பது அவசியம்.


இயற்கையான M sand கருப்பு நிறத்தில் இருக்கும். மீறி அதன் உண்மை தன்மையில் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்கள் வாங்கும் M sand நிறுவனத்தில் ஆய்வகம் இருக்கும்.


அவற்றின் மூலம் அதன் உண்மைதன்னையை உறுதிப்படுத்துமாறு தாராளமாக கேட்கலாம். ஏனெனில் கலவையில் M sand மற்றும் சிமெண்ட் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும்.


இந்த இடத்தில் தான் தவறு நடக்கும். M sand சிமெண்ட் நிறத்திலே இருப்பதால், குறைவான அளவு சிமெண்ட் கலந்தாலும் ஒன்றும் தெரியாது.


சுவர் கட்டப் பயன்படும் எம் சாண்ட் 4mm அளவு கொண்டது. சுவர் பூசுவதற்குப் பயன்படும் பி சாண்ட் 2mm அளவு கொண்டது.


6mm அளவு கொண்ட எம் சாண்ட்டை ரூஃப் கான்கிரீட்டுக்குப் பயன்படுத்துகிறார்கள்.


மணல் கலந்த கலவையிலேயே வீடு கட்டிப் பழக்கப்பட்ட நம் மேஸ்திரிகள் 4mm எம் சாண்டைப் பயன்படுத்தச் சுணக்கம் காண்பிப்பார்கள்.


காரணம் கலவை கையைக் கிழிக்கும் அளவுக்கு இருப்பதுதான். அவர்களுக்குக் கையுறை வாங்கிக் கொடுத்து பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.


இதிலேயே அதிக மாவு கலந்த தரமற்ற எம் சாண்டைப் பயன்படுத்த சில மேஸ்திரிகள் விரும்புவார்கள். ஆனால், அதனால் சுவரின் உறுதி பாதிக்கப்படும்.


இந்த விஷயத்தில் மட்டும் அக்கறை தேவை. மற்றபடி, ஆற்றுமணலை விட M sand தான் சிறந்தது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement