Ad Code

Responsive Advertisement

சாலையோரத்தில் காத்திருந்த ஆசிரியர்களிடம் காரை நிறுத்தி விசாரித்த முதல்வர்

 


சாலையோரத்தில் காத்திருந்த பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்களை பார்த்ததும் காரை நிறுத்தி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். தம்மிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்போருக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார். 


அந்த வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் ஸ்டாலின்.அப்போது ஆசிரியர்கள் சிலர் கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்ததை பார்த்த ஸ்டாலின் காரை நிறுத்தி அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் எதற்காக காத்திருக்கிறீர்கள் என விசாரித்தார். 


2018-19 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான தாங்கள் 1500 பேர் இரண்டாம் பட்டியலில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பார்வார்டு செய்யப்பட்டு ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement