Ad Code

Responsive Advertisement

இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்வது எதில் தெரியுமா..?! தங்கமோ, வீடோ கிடையாது..!

 



இந்தியாவின் மிகப்பெரிய பலமாக இருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் தீர்மானிக்கும் முக்கியக் கருவி. இந்தப் பிரிவை இலக்காக வைத்துத் தான் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் இயங்கி வருகிறது.


 



காரணம் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையும் சரி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும் சரி சற்றுக் குறைவு தான்.


ரிசர்வ் வங்கி இந்தச் சூழ்நிலையில் இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் பிரிவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தரவுகள் அடிப்படையில் இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் காப்பீடு மற்றும் பிஎப் தான்.


காப்பீடும் மற்றும் பிஎப் மீது அதிக முதலீடு 


டிசம்பர் 2020 தரவுகளின் அடிப்படையில் இந்திய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் இடம் காப்பீடும் மற்றும் பிஎப் சுமார் 48 சதவீதம் பேர் இப்பிரிவுகளில் முதலீடு செய்கின்றனர். இதன் மூலம் இந்திய மக்கள் எப்போதும் குடும்பத்திற்கான பாதுகாப்பு அளிப்பதிலும், பாதுகாப்பான முதலீட்டைத் தேர்வு செய்வதிலும் தான் அதிகக் கவனம் செலுத்துகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.


தங்கம் தீரா காதல் 


இதைத் தொடர்ந்து தங்கம் 2வது இடத்தைப் பிடிக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு தங்கத்தின் மீது பெண்களுக்குத் தான் அதிக மோகம் இருந்தது. ஆனால் தற்போது ஆண்களும் அதிகளவில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். தங்கம் அணிவதற்காக வாங்கப்பட்டாலும் அது ஒரு முதலீடாக இருக்கும் காரணத்தால் சுமார் 17 சதவீதம் மக்கள் தங்கம் மீது முதலீடு செய்கின்றனர்.


பிற முதலீடுகள் 

காப்பீடு, பிஎப் மற்றும் தங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து வங்கி வைப்பு நிதி - 16 சதவீதம் சொத்து (வீடு அல்லது நிலம்) - 11 சதவீதம் பங்குச்சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் - 4 சதவீதம் ரொக்கப்பணம் (கையில் பணத்தை வைத்திருப்பது) - 4 சதவீதம்



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement