Ad Code

Responsive Advertisement

கொரோனாவுக்கு பிளஸ் 2 மாணவி பலி

 





செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், கீழக்காரனை எம்ஜிஆர்  தெருவை சேர்ந்தவர்  ஆரோக்யசெல்வி. இவர், மறைமலைநகர் தூய சூசையப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஸ்ருதி (வயது 17). அதே பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.


மாணவி ஸ்ருதிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக  எஸ் ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.  இச்சம்பவம் சக பள்ளி மாணவிகள்  ஆசிரியர்கள் மற்றும்  கீழ்க்காரணை பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்  அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement