Ad Code

Responsive Advertisement

FLASH NEWS : 'ஜாக்டோ - ஜியோ' பேரணிக்கு தடை : ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் அனுமதி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், 73 சங்கங்கள் இணைந்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, கோரிக்கை களை வலியுறுத்தி, ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில், ஆர்ப்பாட்டம் நடத்தியது.இரண்டாம் கட்டமாக இன்று, சென்னை மன்றோ சிலையிலிருந்து, கோட்டை நோக்கி பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கோட்டை நோக்கி பேரணி செல்ல, தமிழக போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதை அடுத்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன், ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்த, ஜாக்டோ - ஜியோவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.'அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்; அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. 

போக்குவரத்துக்கு இடையூறு இன்றியும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையிலும், ஆர்ப்பாட்டம் நடத்தலாம். அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் கூடக்கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்பது உள்ளிட்ட, 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.இதற்கிடையில், போராட்டத்தில் பங்கேற்க செல்வோரின் விபரங்களை, மாவட்டம், வட்டம் வாரியாக, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement