Ad Code

Responsive Advertisement

CPS ரத்து, ஊதிய முரண்பாடு, TET ரத்து கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களை நேரில் வலியறுத்த "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை"யின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

"CPS ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் "

அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் 31.07.2017 அன்று திருச்சியில்  நடைபெற்றது. கூட்டத்தில் CPS திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைதல் ஆகிய இரண்டு கருப்பொருளை மையப்படுத்தி விவாதிக்கப்பட்டது. அரசை எவ்வாறு அணுகுவது, கோரிக்கைகளை எவ்வழியில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 

தீர்மானம் : 1
CPS திட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய அரசை வலியுறுத்துவது.

தீர்மானம் : 2
அடுத்த PAY COMMISSION முன் ஊதிய முரண்பாடுகளை களைவது.

தீர்மானம் : 3
இக்கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது.

தீர்மானம் : 4
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.போன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து CPS திட்டத்தில் இருந்து தமிழகத்திற்கு விளக்கு பெற மத்திய அரசை வலியுறுத்துவது.

தீர்மானம் : 5
2010 முன்னர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஆசிரியர் பனி நாடுநர்களுக்கு TET - இல் இருந்து விளக்கு அளித்து பதிவு மூப்பு அடிப்படியிலேயே பணி அமர்த்த வேண்டும் 

தீர்மானம் : 6
இக்கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதனை வலியுறுத்த  மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களிடம் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க கோரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு மாநிலப் பொதுச்செயலாளர் திரு.பெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாநில தலைவர் திரு.பெ.பராமசாமி  அவர்கள், மாநில பொருளாளர் திரு.சு.சீனிவாசன் அவர்கள் தலைமை தாங்கினர். மாநில இணைப்பொது செயலாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள், மாநில இணைத்தலைவர் திரு.தேவேந்திரன் அவர்கள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement