Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை : தாசில்தார்அலுவலகத்தில் பட்டியல்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதில், முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இதையடுத்து, ஆக., 10ல், சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம், சென்னையில், வருவாய்நிர்வாக ஆணையர், சத்யகோபால் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், தாசில்தார் அலுவலகங்களில், உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை, மக்கள் பார்வைக்கு வைக்கவும், அரசு இணையதளங்களில் வெளியிடவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில், மாநிலம் முழுவதும்உள்ள இடர்பாடுகளை தடுக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இத்தகைய கலந்தாய்வு கூட்டம் நடத்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், வருவாய் நிர்வாக ஆணையர் தரப்பில், மாவட்ட கலெக்டர்களுக்கு, சில உத்தரவுகள் பிறப்பித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது: தாசில்தார் அலுவலகங்களில், உதவித் தொகைக்காக விண்ணப்பிப்போரை, வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும். 'சீனியாரிட்டி' அடிப்படையில், அவர்களுக்கான உத்தரவு வழங்க வேண்டும். உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து, உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement