Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை கடைசி நாள்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற நாளை கடைசி நாள்.
தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 2,594; சுயநிதி கல்லுாரிகளில், 1,300 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
அரசியில், பி.டி.எஸ்., படிப்புக்கு, 170; சுய நிதி கல்லுாரிகளில், 1,710 இடங்களும் உள்ளன.இதற்கான விண்ணப்ப வினியோம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் நடந்து வருகிறது.சுகாதாரத்துறை இணைய தளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப வினியோகம் துவங்கிய, ஒன்பது நாட்களில், கல்லுாரிகள் மூலம், 41 ஆயிரத்து, 264 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை, 17ல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜ் கூறுகையில், ''மருத்துவ கல்லுாரிகள் மற்றும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மறுநாள், மாலை, 5:00 வரை பெறப்படும்,'' என்றார்.

விண்ணப்பங்களை சமர்ப்பித்தோர் விண்ணப்ப படிவத்தின் தற்போதைய நிலை குறித்துwww.tnhealth.org, www.tnmedicalselection.orgஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் அல்லது நீட் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement