தமிழக அரசின்நல்லாசிரியர் விருதுக்கான,விதிகளில் மாற்றம் செய்ய,பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. திறமையானஆசிரியர்களை கண்டறிந்து,விருது வழங்க, விதிகளில்புதிய அம்சங்கள்சேர்க்கப்பட உள்ளன.தமிழகபள்ளி கல்வித்துறைசார்பில் விதிகள்வகுக்கப்பட்டு, நல்லாசிரியர்விருதுக்கான ஆசிரியர்கள்தேர்வுசெய்யப்படுகின்றனர்.
பல ஆண்டுகளாக ஒரேநடைமுறைபின்பற்றப்படுகிறது. இதில்,விருது பெறுவது குறித்துவிபரம் தெரிந்தவர்கள்,அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர்மட்டுமேவிண்ணப்பிக்கின்றனர்.ஆனால், பல ஆசிரியர்கள்,திறமையாக பாடம்நடத்தியும், மாணவர்களைநல்வழிப்படுத்தியும்,சாதனைகள்நிகழ்த்துகின்றனர்.இதுபோன்ற ஆசிரியர்கள் பலர்,விருது பெற முயற்சிப்பதுகிடையாது. சிலர் விருதுபெற முயற்சித்தாலும்,அதற்கான வழிமுறைகள்தெரியாமல் விட்டுவிடுகின்றனர்.
எனவே, குறிப்பிட்ட ஒருகுழுவினரேவிண்ணப்பித்து, விருதுபெறும் நிலை உள்ளது.இந்நிலையை மாற்றவும்,பயிற்றுவித்தலில் மற்றும்மாணவர்களை வழிநடத்துவதில், சிறந்தஆசிரியர்களை மட்டுமேஅங்கீகரிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. அதனால்,நல்லாசிரியர் விதிகளில்மாற்றம் கொண்டு வரப்படஉள்ளது. இந்த ஆண்டே,புதிய விதிகள் அமலுக்குவரவுள்ளதாக, அதிகாரிகள்தெரிவித்தனர்.
1 Comments
நல்லாசிரியர் விருது வழங்குவதின் விதிமுறைகளில் மாற்றம் வரவேற்கத்தக்கது.மேலே குறிப்பிட்டுள்ளது போல விருது பெற நடமுறைகள் தெரியாமலெல்லாம் இங்கே யாரும் இல்லை. உண்மையான அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்கள் தங்களை விளம்பரப்படுத்த விரும்புவதில்லை என்பதே உண்மை.
ReplyDeleteமுன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் பள்ளியின் நேரடித்தொடர்புகளில் உள்ளோரிடம் களஆய்வு நடத்தி தகுதியான ஆசிரியர்களை தெரிவு செய்ய வேண்டும். பத்திரிகை விளம்பரம் ஊடகங்களை பயன்படுத்தி பணியாற்றுவோரை விடவும், வாய்ப்புகளற்ற சூழலில்கூட மனவுறுதியோடு மாணாக்கரின் நலனை முன்னிறுத்தி பணிபுரியும் ஆசிரியர்களை கண்டறிந்து வெளிக்காட்ட வேண்டும். கடந்தகால செயல்பாட்டை மட்டுமே முன்னிறுத்தி விருதுவழங்கும் நடைமுறை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். எப்பொழுதும் மாணவர்நலனுக்காக பாடுபடுபவர்களுக்காக நன்மை தரும் விதிகள் வந்தால் சரிதான். வாழ்க வளமுடன்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை