"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு"

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை முன்கூட்டியே அறிவித்துள்ளது. இதன்படி, பிளஸ் 2 வகுப்பு தேர்வு 2018 மார்ச் 1ம் தேதியும், பிளஸ் 1 வகுப்பு தேர்வு மார்ச் 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு ேதர்வு மார்ச் 16ம் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 






கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கடந்த ஒரு மாதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த அறிவிப்பாக இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடக்கப் போகும் தேதியை முன்கூட்டியே வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் பள்ளிகள் தொடங்கும் நாளிலேயே தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது மாணவர்கள், பெற்றோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசுத் தேர்வுகள் துறை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து மாணவர்களும் எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் தேர்வு எழுத வசதியாக, ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்ய பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படுகிறது.