அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்த யோகா முக்கியம் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது.