Ad Code

Responsive Advertisement

பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை

'பேராசிரியர்கள் நியமனத்துக்கு தகுதி ஒப்புதல் பெறாத, கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.

தமிழகத்திலுள்ள, பி.எட்., கல்லுாரிகளில், பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர்களை நியமிக்க, பல்கலையிடம் தகுதி ஒப்புதல் பெற வேண்டும். கடந்த கல்வியாண்டில், தகுதி ஒப்புதல் பெறாமல், பல கல்லுாரிகள், பேராசிரியர்களை நியமித்துள்ளன.

இந்த கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிவிப்பில், 'மே, 15க்குள், புதிய பணி நியமனங்களுக்கு, தகுதி ஒப்புதல் பெற வேண்டும். இல்லாவிட்டால், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படாது' என, தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement