11 டிசம்பர் 2016 நடந்த அஞ்சல்துறை தேர்வில் ஹரியானவை சேர்ந்தவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்த விவகாரம் தேர்வு முடிவு வெளியான நாளில் சர்ச்சைக்குள்ளானது. இந்த தேர்வு முடிவால் தமிழத்தை சேர்ந்த மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தமிழக அரசியல் கட்சித்தலைவர்களால் குற்றச்சாட்டுகளாக வைக்கப்பட்டன.
இதனால் தேர்வின் இறுதி முடிவை வெளியிடாமல் தேர்வுத்துறை மௌனம் காத்து வந்தது, இந்த நிலையில் நேற்று தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பை தேர்வுத்துறையின் வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முடிவால் முதல் மதிப்பெண் எடுத்த தமிழக மாணவர்கள் நிறைய பேர் பாதிக்கப்படுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 47 இடங்களில் உள்ள அஞ்சல் பிரிவுகளுக்கான தேர்வாகத்தான் இது நடத்தப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர் எந்த வட்டத்தை தேர்வு செய்கிறாரோ அங்கு மட்டும் தான் அவருக்கான போட்டி அப்படி இருக்கையில் தேர்வு முழுவதையும் எப்படி ரத்து செய்யலாம். 4 பிரிவுகளுக்கான இடங்களில் மட்டும் தான் ஹரியானவை சேர்ந்தவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அப்படி இருக்கையில் தேர்வை ரத்து செய்வதாக மட்டும் அறிவித்து விட்டு அதற்கான விளக்கங்கள் எதுவும் வலைதளத்தில் இல்லை.
ஹரியானவை சேர்ந்தவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட உதவியது தேர்வுத்துறையில் உள்ளவர்கள்தான் அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மறு தேர்வு எப்பொழுது நடத்தப்படும் எனபது போன்ற பல கேள்விகளுக்கு விடையே இல்லாமல் ஒருதலை பட்சமாக அஞ்சல் துறை நடந்து கொண்டுள்ளது.
குளறுபடி நடந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே தேர்ச்சி பெற்றவர்களின் விருப்பமாகும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை