Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்



தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்தில், மொத்தம், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன.

இவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,402 அரசு உதவி பெறும் பள்ளிகள். இவற்றில், 86 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி அருகில் உள்ளோர் நடந்தும், சைக்கிள்களிலும் வருகின்றனர். துாரத்தில் உள்ளோர், பஸ், ரயில், வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள். மாணவர்கள் ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ, திடீரென நோய் தாக்கினாலோ, அவர்களின் சிகிச்சைக்காக செலவிட, ஏழைப் பெற்றோர்களால் முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மாணவர் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் குழு, புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

இதன் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படுகிறது. படிப்பு காலம் முழுவதும், மாணவர்கள், இலவசமாக, தரமான சிகிச்சை பெறும் வகையில், தமிழக அரசே, காப்பீடுக்கான பிரீமியம் தொகையை செலுத்த உள்ளது. 'சட்டசபையில் பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement