Ad Code

Responsive Advertisement

புத்தகப் பைகள் இல்லாத தினம்: உ.பி. அரசு திட்டம்.

அரசு பள்ளிகளில் சனிக்கிழமை ஒரு தினத்தை மட்டும் புத்தகப் பைகள் இல்லாத தினமாக கடைப்பிடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டு வருகிறது.


இதுதொடர்பாக அந்த மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தலைநகர் லக்னௌவில் துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு பள்ளிகளில் சனிக்கிழமை ஒரு நாளை மட்டும் புத்தகப் பைகள் இல்லாத தினமாக அறிவிக்கலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் புத்தகப் பைகளை எடுத்து வரத் தேவையில்லை.அன்றைய தினம் படிப்பைத் தவிர விளையாட்டு போன்ற மற்ற திறன் விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம். இதன்மூலம், ஆசிரியர், மாணவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகளின் வண்ணங்களையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாற்றியமைத்தது.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது புதிய வண்ண சீருடைகளை மாணவர்கள் அணிந்துச் செல்ல உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement