மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதாரை இணைக்க, புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுகாதாரத் துறையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுகிறது.
இதில், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, 'ஸ்டெம்செல்' மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட 1,016 வகை நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கு நிவாரணம் பெற, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது, 216 வகையான, சமீபத்திய மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் பாதிப்புக்கான நிவாரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், ஆதார் விபரங்களை இணைக்கும் பணிகள், கிராமங்கள் தோறும் நடக்கின்றன. இதற்காக, திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு, பணிகள் நடக்கின்றன. இருந்தாலும், 40 சதவீத இணைப்பு பணிகளே, தற்போது வரை நடந்துள்ளன.
எனவே, இணைப்புப் பணிகளை எளிமையாக்கும் விதத்தில், பயனீட்டாளர்கள், தாங்களே மருத்துவ காப்பீட்டு விபரங்களுடன், ஆதார் விபரங்களை இணைத்துக் கொள்ளலாம் என, அரசு அறிவித்தது. இதற்கு வசதியாக புதிய, 'ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
திட்ட அலுவலர்கள் கூறியதாவது:
பயனீட்டாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். பயனீட்டாளர்கள், www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு சென்று, cmchis online என்ற இணைப்பை, 'க்ளிக்' செய்தால், 'ஆப்'ஐ பதிவிறக்கம் செய்யலாம். அதில், மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையில் உள்ள, 22 இலக்க எண்ணை பதிவு செய்து, ஆதார் விபரங்களுடன், மருத்துவ காப்பீட்டு விபரங்களை தாங்களாகவே இணைத்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை