Ad Code

Responsive Advertisement

பள்ளி வாகன ஆய்வை மே 31-க்குள் முடிக்க வேண்டும்: வட்டார போக்குவரத்து அலுவகங்களுக்குஉத்தரவு.

தமிழகத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் வரும் 31-ம் தேதிக்குள் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென தமிழக அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்டிஓ) தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இயக்கப்படும் சுமார் 38 ஆயிரம் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க முன்கூட்டியே பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்டிஓ) உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்பு கருவிகள், முதல் உதவிப்பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதற்கிடையே, இந்த ஆண்டில் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு மோட்டார் வாகன (பள்ளி வாகனங்களை ஒழுங்கு படுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012-ன் படி ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில், பள்ளி வாகனங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது இடத்தில் வைத்து வாகனங்களின் தகுதிச் சான்று நடப்பில் உள்ளதா அந்த வாகனங்கள் பயணிக்கும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு இருக்கை வசதி, அவசர காலவழி, வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இந்த சிறப்பு சோதனையை வரும் 31-ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண் டும் என தெரிவிக்கப்படுகிறது.

 இந்த சோதனையை மேற்கொள்ள பள்ளி வாகனங்களை பொது இடத்துக்கு கொண்டுவர வேண்டு மென பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு உட்படாத வாகனங்களை ஜூன் 1-ம் தேதிக்கு பின்னர், இயக்க அனுமதிக்க கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி நிர்வாகங்களும் தாமதம் இன்றி வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement