Ad Code

Responsive Advertisement

TNTET - நவம்பர்' 2011 க்கு முன்பு அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (TET நிபந்தனை ஆசிரியர்கள்) தகுதித்தேர்வு எழுத தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.



TNTET - நவம்பர்' 2011 க்கு முன்பு அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் (TET நிபந்தனை ஆசிரியர்கள்) தகுதித்தேர்வு எழுத தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

 15.11.2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (TET) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, 4 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது நினைவுக்கூரத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement