கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் முதல்நாள் சுமார் 100 விவசாயிகள் வரை பங்கேற்றனர். தற்போது, பிறமாநில விவசாயிகளின் ஆதரவும் தமிழக விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்டை ஓடு, மண் சட்டி, தூக்குக்கயிறு உள்ளிட்டவற்றை வைத்துப் போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் வாயில் எலிக்கறி, பாம்புக் கறியை வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 22வது நாளாகத் தொடரும் இந்தப்போராட்டத்துக்குக் கிடைத்த பலனாக, விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, “சிறு குறு விவசாயிகள் மட்டுமன்றி அனைத்து விவசாயிகளும் பெற்ற கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை