Ad Code

Responsive Advertisement

பழைய ரேஷன் கார்டுகளை திருப்பி தர தேவையில்லை!

புதிதாக வழங்கப்படும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற்ற பின், பழைய ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற தவறான தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருவதால், உணவு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த கார்டு, ரேஷன் கடைக்கு வந்ததும், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' பற்றிய எஸ்.எம்.எஸ்., வரும். அதை, ஏழு தினங்களுக்குள், ரேஷன் கடைக்கு சென்று, ஊழியரிடம் தெரிவித்ததும், ஸ்மார்ட் கார்டு தரப்படும். அப்போது, பழைய கார்டை, கடைகளில் ஒப்படைக்க தேவையில்லை. ஆனால், சிலர், 'ஸ்மார்ட் கார்டு பெறும் வேளையில், பழைய ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டி இருப்பதால், அதனை முழுவதுமாக, 'ஸ்கேன்' அல்லது நகல் எடுத்து கொள்ளவும்' என, வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டுதாரர், ஸ்மார்ட் கார்டு பெறும் போது, பழைய கார்டை கடைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதில், 'ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டு விட்டது' என்று, ஊழியர் முத்திரை வைத்து, ரேஷன் கார்டுதாரரிடமே, பழைய கார்டை திரும்ப தருவர். எக்காரணம் கொண்டும், பழைய கார்டை, திரும்ப வாங்க கூடாது என, ஊழியர்களிடம் கூறப்பட்டு உள்ளது. இதனால், பழைய கார்டை நகல் எடுக்கவோ, ஸ்கேன் செய்யவோ வேண்டாம். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை, பழைய கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். பழைய கார்டை, ஊழியரிடம் வழங்கினால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். அதை யாரிடமும் தர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

பிழை ஏன்? : ஸ்மார்ட் கார்டில் உள்ள பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி ஆகிய விபரங்கள், 'ஆதார்' கார்டை, ஸ்கேன் செய்ததில் பெறப்பட்டவை. எனவே, ஆதார் கார்டில் பிழை இருந்தால், அது, ஸ்மார்ட் கார்டிலும் வருகிறது. அது பற்றிய அச்சம் வேண்டாம்.
பொது வினியோக திட்ட இணையதளத்தில் சென்று, பிழையை சரி செய்யலாம். புது கார்டை, அரசு இ - சேவை மையங்களில் வாங்கி கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement