Ad Code

Responsive Advertisement

'இ - சேவை' மையங்களில் 'ஆதார்' இழுபறி நீடிப்பு


'இ - சேவை' மையங்களில், 'ஆதார்' பதிவு செய்வதில் சிக்கல் தொடர்வதால், மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், ஆதார் கார்டு வழங்கும் பணி, அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், இ - சேவை மையங்களிடம் தரப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் விண்ணப்பித்ததும், அதை மத்திய அரசின், யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு சரிபார்த்து, 'ஆதார்' எண் ஒதுக்குகிறது. பின், அதற்குரிய அட்டைகளை, இ - சேவை மையங்கள் அச்சிட்டு வழங்குகின்றன.



இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு, இ - சேவை மையங்களில், ஒரு மாதத்திற்கும் மேலாக, ஆதார் அட்டைகள் வழங்கப்படாத நிலை உள்ளது. அதற்கு, பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். இதனால், ஆதார் அட்டை எப்போது கிடைக்கும் என தெரியாமல், மக்கள் குழப்பமடைந்து

உள்ளனர். அத்துடன், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பிய மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம், ஏப்., 1 முதல், 5 வரை கூடுதல் அவகாசம் அளித்திருந்தது. அதற்கு, ஆதார் எண் கட்டாயமாகும். அவர்களில் பலருக்கு, ஆதார் எண் கிடைக்காததால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. இந்த ஆண்டு முதல், இன்ஜி., கல்லுாரி சேர்க்கைக்கும், ஆதார் கட்டாயமாகி உள்ளது. அவர்களுக்கும், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பல்வேறு வங்கிகள், வாடிக்கையாளர்களை, ஆதார் எண்ணை இணைக்கும்படி கட்டாயப்படுத்தி வரும் நிலையில், அவர்களும் ஆதாருக்காக காத்திருக்கின்றனர். மத்திய அரசின் இணைய சேவைகளை நிர்வகிக்கும் பிரிவின் இணையதள பராமரிப்பு பணி காரணமாக, இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக, இ - சேவை மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement