Ad Code

Responsive Advertisement

விடைத்தாள் திருத்தும் பணி பல்கலை பல லட்சம் பாக்கி


மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் 'செமஸ்டர்' தேர்வு விடைத்தாள் திருத்திய பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பூதியம் வழங்காமல் பாக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இப்பல்கலைக்கு உட்பட்ட 80க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் நவ.,2016 ரெகுலர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் நடந்தன. இதன்பின் விடைத்தாள் திருத்தும் பணி பல்கலையில் நடந்தது. இதில் மதுரை உட்பட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 36 விடைத்தாள் வழங்கப்பட்டன. இதற்காக இளங்கலை தாள் ஒன்றுக்கு தலா 12 ரூபாய், முதுகலை தாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என 'தேர்வுத்தாள் மதிப்பூதியம்' வழங்கப்படும். இத்தொகை திருத்தும் பணி முடிந்தவுடன் வழங்கப்படும். ஆனால் மே 21 ல் அடுத்த 'செமஸ்டர்' தேர்வுகள் நடக்கவுள்ள நிலையிலும் 90 சதவீதம் பேருக்கு இதற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. இதுபோல் 2016ம் ஆண்டு தொலைநிலை கல்வி இயக்ககத்திலும் விடைத்தாள் திருத்திய பணியில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட கல்லுாரி, பல்கலை பேராசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் கூறுகையில், "இப்பிரச்னை என் கவனத்திற்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை. இதுகுறித்து விசாரித்து விடைத்தாள் திருத்தியதற்கான மதிப்பூதியம் விரைவில் வழங்கப்படும்," என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement